Published On: Friday, November 15, 2013
யாழில் இன்று காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)
சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தியுள்ளனர்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
'இராணுவத்திடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே', 'அபிவிருத்தி வேண்டாம் எங்கள் பிள்ளைகள் வேண்டும்' போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தி கடும் சோதனை நடவடிக்கைகளை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருவதோடு ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.