Published On: Friday, November 15, 2013
"அங்கத்துவ நாடுகளின் முடிவுகளை மதிக்கின்றோம்" - கமலேஷ் சர்மா!
இலங்கையில் நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாடு தொடர்பில் அங்கத்துவ நாடுகள் எவ்வாறான முடிவுகளை எடுத்தாலும் அவற்றை நாங்கள் மதிக்கின்றோம் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரிவித்தார்.ஜனநாயகம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சிபடுத்தல், அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்தவும் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சித்திரவதைகள் தொடர்பில் ஆராய பொதுநலவாய அமைப்பு இலங்கையுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் இணைந்து இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
செய்தியாளர் மாநாட்டில் கமலேஷ் சர்மா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாடு விடயத்தில் அங்கத்துவ நாடுகள் எவ்வாறான முடிவுகளை எடுத்தாலும் அவற்றை பொதுநலவாய அமைப்பு மதிக்கின்றது. நாடுகள் தமது பிரதிநிதிகளை இங்கு அனுப்பியுள்ளது. எனவே பொது நலவாய மாநாட்டின் இறுதியில் சிறந்த வெளியீடு கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார் அவர்.