About us
இணையத்தில் புதியதோர் உதயம்
வணக்கம்
அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டு இழப்புக்களைச் சந்தித்து மீண்டும் நம்பிக்கையுடன் எழத் தொடங்கியிருக்கும் எமது சமூகத்தின் இருப்பிற்காய் இதுவரை குரல்கொடுத்து வந்த ‘இருக்கிறம்' சஞ்சிகை தனது 99ஆவது வெளியீட்டுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியை மனவருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.
2007ஆம் ஆண்டு மாதமிருமுறை இதழாக ஆரம்பிக்கப்பட்ட ‘இருக்கிறம்' அரசுசாரா நிதி நிறுவனமொன்றின் உதவியுடன் வெளிவந்தது நீங்கள் அறிந்திருப்பீர்கள். விநியோக சிக்கல்கள், அதிகரித்து வந்த செலவீனங்கள், சந்தைப்படுத்தல் குறைபாடுகள் போன்ற காரணங்களால் இருக்கிறம் நிர்வாகம் சிக்கித் திணறியபோது நிதியும் நிறுத்தப்பட கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இருக்கிறம் 64 இதழ்கள் வெளிவந்த நிலையில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக வீரகேசரிப்பத்திரிகையின் எக்ஸ்பிரஸ் சிலோன் லிமிட்டெட் நிர்வாகம் ‘இருக்கிறம்' சஞ்சிகையை பொறுப்பேற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து மாற்றுப்பத்திரிகையாக சமூக அவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொணரும் ஒரு சமூக இதழாக ‘இருக்கிறம்' வாரம் தோறும் வெளிவர ஆரம்பித்தது. இதுவரை 35 இதழ்கள் வெளிவந்த நிலையில் போதியளவு விற்பனையின்மையால் ‘இருக்கிறம்' சஞ்சிகையை இடைநிறுத்துவதாக வீரகேசரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதனால் இனித் தொடர்ந்தும் ‘இருக்கிறம்' சஞ்சிகையை கொண்டு நடத்துவதற்குரிய நிதிவளமற்ற நிலையில் நாம் இருப்பதால் சஞ்சிகையை அதன் 99 ஆவது வெளியீடான இந்த இதழுடன் இடைநிறுத்திவிடுவதாக எமது நிர்வாக பீடம் முடிவெடுத்திருக்கின்றது. மீண்டும் துளிர்ப்போம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் இருக்கிறமை வாசகர்களுக்கு சஞ்சிகை வடிவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றோம்.
சமூக, அரசியல் கலாசார விடயங்கள், சமூக நீதி, மக்களுடைய அவலங்களை துணிந்து வெளிப்படுத்துதல், வெளிவராத உண்மைகளை வெளிக்கொணர்தல் என மாற்று சிந்தனைக்கான களத்துடன் புதிய சிந்தனையுடைய மக்கள் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் பணியாகக் கொண்டிருந்தோம். மக்களின் அன்றாட பிரச்சினைகள். தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் வாழ்வை மாற்றி நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே ‘இருக்கிறம்' தனது உள்ளடக்கமாகக்கொண்டு வெளிவந்தது.
இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இதை ஒரு மைல் கல் எனலாம். வாசிப்புப்பழக்கம் மிகக்குறைவாக உள்ள எமது சமூகத்தில் அவர்களை வாசிக்கத் தூண்டுவதற்கான பல்வேறு முயற்சிகளையும் ‘இருக்கிறம்' மேற்கொண்டு வந்தது. அனாலும் சிற்றின்பத்தையும் சினிமாக் கவர்ச்சிகளையும் உள்ளடக்கமாகவும் வெறும் பொழுது போக்கு அம்சங்களை இணையவாயிலாகப் பெற்று பக்கங்களை நிரப்பி விநியோகிக்கும் இலட்சியநோக்கமற்ற பத்திரிகைகளின் விற்பனைக்கு மத்தியில் ‘இருக்கிறம்' தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல முடிகிறது.
கருத்தைக் கவரும் இலாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், களத்திலிருந்து எமது நிருபர்கள் தரும் பாதிக்கப்பட்ட மக்களின் குறிப்புக்கள், ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்ப, கவர்ச்சிகரமான கட்டமைப்பு, பிரதேச வாசனைகளுடன் கூடிய மொழிவடிவம், இணையத் தகவல்களைப் பின்பற்றாமல் பயிற்றப்பட்ட பத்திரிகையாளர்கள் மூலமாக தகவல்களைத் திரட்டுதல், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் கூடிய இளம் பத்திரிகையாளர்களின் முயற்சி ஆகியனவே ‘இருக்கிறம்' புதிய சிந்தனைகளின் தோற்றுவாயாக இதுவரை மக்கள் மத்தியில் தனது படைப்பியலை பரவலாக்கியது.
ஒரு மாற்றுப் பத்திரிகையினை வளர்த்தெடுக்க முன்வரவேண்டிய தேவை இன்று எமது சமூகத்திற்கு இருக்கின்றது. இலட்சியத்தடன் அர்ப்பணிப்பையும் விலையாகக் கொடுத்துநிற்கும் எம்முடன் தோளோடு தோள் நிற்கும் பத்திரிகையாளர்கள், வாசக நெஞ்சங்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நன்றிகளை காணிக்கைப் பூக்களாகத் தூவுகின்றோம்.
இலட்சியம் ஒன்றே. வடிவங்கள் மாறலாம் என்பதற்கிணங்க மீண்டும் பிறப்பெடுப்போம். துடிப்பற்று நாம் நின்றுபோகவில்லை. என்றாவது ஒரு நாள் எமது உறவுகளுக்காக சமூக மாற்றத்திற்காக பிறப்பெடுத்து உங்கள் முன் வரும்பொழுது எங்களை வரவேற்றுக் கொள்ளுங்கள். அந்த நாள் கூடி வரும் போது நாம் மீண்டும் சந்திப்போம். அதுவரை இணையத்தினூடாக உங்களைச் சந்திக்கின்றோம்.
எந்தவொரு தமிழ் இணையத்தளங்களிலும் இல்லாத புதிய பல விடயங்களையும் இந்த இணையத்தில் நீங்கள் பார்வையிடலாம். இந்த இணையத்தள சேவையுடன் இருக்கிறம் குழு தனது செய்திச் செவையை ஆரம்பிக்கின்றது. உடனுக்குடன் செய்திகளையும், வெளிவராத பல உண்மைத் தகவல்களையும் முடிந்தவரை துணிச்சலுடன் வாசகர்களுக்கு வழங்க 'இருக்கிறம்' குழு முழு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இணையத்தில் ஒரு சஞ்சிகையாக இருக்கிறம் வாசகர்களைச் சென்றடைவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
வாசகர்களே! உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் எங்களுக்கு வழங்குங்கள். படைப்பாளிகளே உங்களது ஆக்கங்களையும் எங்களுக்கு அனுப்புங்கள். இணையத்தில் 'இருக்கிறம்' இமயத்தை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் உங்களை வரவேற்கின்றோம்.
- இருக்கிறம் குழு