எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Friday, November 15, 2013

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிசார் தாக்குதல்

 யாழ் பொது நூலகத்திற்கு அருகில் கனவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த போது அவர்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை  பொலிஸார் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. 

நூலகத்தில் கூட்டமைப்பினரைச் சந்திக்க வந்த பிரதமர் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட மக்கள் பொலிசாரினால் நூலகத்திற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும் பொலிசாரின் தடைகளை மீறி முன்நகர முற்பட்ட மக்கள் மீது பொலிசார் கைகளாலும் அவர்களது லத்திகாளாலும் தாக்கியதோடு மக்களை முன்னகர விடாது அவர்களை நிலத்தில் தள்ளி விழுத்தியதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது மக்களோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவப் பாதிரிமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தனர். 









நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்