Published On: Friday, November 15, 2013
யாழ்ப்பாணம் வந்தார் பிரிட்டிஸ் பிரதமர் - மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர்தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
யாழ் நூலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நூலகத்துக்கு அருகே ஒரு இடத்தில் கூடியிருந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திக்க அனுமதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்கள் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டவில்லை.
பெருமளவில் இங்கு திரண்டிருந்த மக்கள் பிரிட்டன் பிரதமர் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேஷமிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ரோரும் மனித உரிமை ஆர்வலர்களும் மதகுருமாரும் கலந்துகொண்டிருந்தனர்.
நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு முடிந்து பிரதமரும் அவரது குழுவினரும் வெளியேறும் வரை மக்ளுக்கு குறிக்காக வாகனங்களை நிறுத்தியும் கைகளால் தள்ளிளும் பொலிசார் மக்களைத் தடுத்தவாறிருந்ததைக் காணமுடிந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் பிரதமருடன் வந்திருந்த செய்தியாளர்கள் உட்பட சிலர் வெளியே வந்து, நிலைமைகளை அவதானித்தனர். அப்படியாக வந்தவர்களிடம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ் நூலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நூலகத்துக்கு அருகே ஒரு இடத்தில் கூடியிருந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திக்க அனுமதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்கள் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டவில்லை.
பெருமளவில் இங்கு திரண்டிருந்த மக்கள் பிரிட்டன் பிரதமர் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேஷமிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ரோரும் மனித உரிமை ஆர்வலர்களும் மதகுருமாரும் கலந்துகொண்டிருந்தனர். நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு முடிந்து பிரதமரும் அவரது குழுவினரும் வெளியேறும் வரை மக்ளுக்கு குறிக்காக வாகனங்களை நிறுத்தியும் கைகளால் தள்ளிளும் பொலிசார் மக்களைத் தடுத்தவாறிருந்ததைக் காணமுடிந்தது.