எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Friday, November 15, 2013

பொதுநலவாயப் பிரதிநிதிகளின் வலி.வடக்கு பயணம் நிறுத்தம்!

யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை வலி. வடக்குப் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் அது நிறுத்தப்பட்டு அவர்கள் கொழும்புக்குத் திரும்பியுள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டின் சிவில் சமூக அமர்வில் பங்கேற்க வந்த 50 பிரதிநிதிகள் இரு நாள் பயணமாக நேற்று முன்தினம் வடபகுதிக்கு வருகை தந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த அவர்கள் நேற்றுக் காலை நயினாதீவுக்குச் சென்றனர். அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து யாழ். அரச அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அவர்கள் சென்றனர். தொடர்ந்து வலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை இந்தக் குழுவினர் பார்வையிடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருந்தும் இறுதி நேரத்தில் குறித்த திட்டத்தை இடைநிறுத்திய இலங்கை அதிகாரிகள் அவர்களை திரும்பவும் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர்.

இதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முன்பாக வலி. வடக்கு மக்கள் தமது  வாழ்வுரிமையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்