Published On: Friday, November 15, 2013
மாநாட்டை தொடக்கிவைத்து ஜனாதிபதி உரை
23–வது காமன்வெல்த் நாடுகள் மாநாடு இலங்கையின் கொழும்பு நகரில் தாமரை தடாகம் அரங்கில் இன்று காலை தொடங்கியது. தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. காமன் வெல்த் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் முன் னிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இலங்கை இப்போது புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. 30 வருடங்களாக நீடித்த யுத்தம் 2009–ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
மனித உரிமை மீறல்கள் இல்லாமல் மக்களின் வாழ்வுரிமை இலங்கை அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்தாது மக்களின் நலன் மற்றும் அபி விருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மதங்களையும் இலங்கை மதிக்கிறது. மற்றவர்கள் செய்யாததை தேடுவதை விட செய்தவை தொடர்பாக தேடிப்பார்ப்பதே நமது கடமையாக வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.



