Published On: Sunday, March 18, 2012
கடந்த 30 வருடங்களில் சம்பந்தனால் ஒரு பாலத்தையேனும் கட்ட முடிந்ததா? பசில் கேள்வி
கடந்த 3 ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை 17 புதிய பாலங்களை கிழக்கு முதலமைச்சர் கட்டிமுடித்துள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஒரு சிறிய பாலத்தினையாவது கட்ட முடிந்ததா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடந்து உரையாற்றிய அவர் உணர்ச்சி வசனங்களைப் பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர் களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும். சுமார் 2,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ் தர்களை கொலை செய்த விடுதலை புலி இயக்க ஆதரவாளர்கள் தான் இன்று ஜெனீவாவில் மனித உரிமை பற்றி பேசுகின்றனர் கிழக்கு மாகாணத்தில் சுமார் 209 புத்திஜீவிகளையும் 2000க்கு மேற்பட்ட கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர் களையும் இழந்த பின்னர்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவாக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்லில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்வதற் காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்த சிவனேச துரை சந்திரகாந்தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடாத்த முயற்சித்தவர்கள் தான் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்.
சம்பந்தன் மற்று
ம் ஆனந்த சங்கரி ஆகியோரின் உயிர்களுக்கு இலங்கை படையினர் தான் பாதுகாப்பு வழங்கி பாதுகாத் தனர் என்பதை மறந்து விடக் கூடாது. ஜனாதி பதியின் விருப்பம் இந்த நாட்டில் இன மத வேறு பாடின்றி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும். யுத்த காலத்தில் தங்களது குழந்தைகளை லன்டனிலுள்ள பாடசாலை களில் கல்வி கற்க வைத்துவிட்டு அங்கிருந் தவர் கள் தேர்தல் வரும் போது இங்கு வருகின் றனர். அவர்களின் பிள்ளைகள் இங்குள்ள பாட சாலைக்கு செல்வது கிடையாது. அவர்களுக்கு தேவை பிரச்சினை இருக்க வேண்டும். இங்கு எந்தவித அபிவிருத்தியும் நடக்கக் கூடாது என்பதே அவர்களின் விருப்பமாகும். என்று அவர் தெரிவித்தார்.

