Published On: Sunday, March 18, 2012
சல்மான்ருஷ்டி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வரமறுத்தார் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இவரது சாத்தானின் கவிதைகள் என்ற நூல் பெருத்த சர்ச்சை யை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்ப்பு காட்டப் பட்டு வருகிறது.சாத்தானின் கவிதைகள் நூலுக்கு இந்தியா வில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜனவரி மாதங்களுக்கு முன்பு நடந்த இலக்கிய திருவிழாவில் இவர் கலந்து கொள்வதாக இருந்தது. பலத்த எதிர்ப்பு காரணமாக அவரது ஜெய்ப்பூர் வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு பேசுகிறார். இன்று இரவு அவரது உரை இடம் பெறுகிறது. அவரது டெல்லி வருகைக்கு முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
டெல்லி ஜும்மா மசூதியில் தொழுகைக்கு பின்பு, வாசலில் கூடி நின்று முஸ்லிம்கள் சல்மான்ருஷ்டிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் சல்மான் ருஷ்டியை பங்கேற்க அனுமதிக்க வேண் டாம் என்றும், நிகழ்ச்சி அமைப்பாளர் களுக்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சல்மான் ருஷ்டி பங்கேற்பதில் மாற்றம் எதுவும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சி நடக்கும் தாஜ் பேலஸ் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சல்மான்ருஷ்டி கலந்து கொள்வதால், அவர் பங்கேற்க மறுத்து டெல்லி வருகையை ரத்து செய்து விட்டார்.

