Published On: Sunday, March 18, 2012
அமிதாப்பச்சனின் சொத்து மதிப்பு சுமார் 493 கோடி ரூபாயாம்!
அமிதாப்பச்சனின் குடும்ப சொத்துமதிப்பு சுமார் 493 கோடி ரூபாய் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் முலாயம் சிங்கின் சமாஜ் வாடி யில் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் இணைந்தார். தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக வேட்பாளராக களமிறங்கியுள் ளார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரின் சொத்து மதிப்பு பற்றி தெரிவித்துள்ளதாவது:-சொத்து மற்றும் முதலீடாக 402 கோடி ரூபாயும், தன்னுடைய தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு சுமார் 13.34 கோடி, அமிதாப்பின் தங்கம் வெள்ளியின் மதிப்பு 26.23 கோடி ரூபாய் உட்பட சொத்து மதிப்பு சுமார் 493 கோடி ரூபாய் உள்ளது என தெரிவித்துள்ளார்.

