Published On: Saturday, March 17, 2012
அறிக்கை சிறைச்சாலை ஆணையாளரிடம்!
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறை உத்தியோகத்தர்களால் துஷ்பிரயோக த்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு வின் அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட 8ஆம் திகதியன்றுக்கு முன்தினம் இரவு பெண் கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு மேடையேற்றப்படவிருந்த நாடகமொன்றின் ஒத்திகைக்காக எனக்கூறி பெண் சிறைக்கைதிகள் சிலரை ஏனைய பெண் கைதி களிடமிருந்து வேறாக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே தெளிவுபடுத்திக்கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி குறிப்பிட்டார்.

