எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Saturday, March 17, 2012

அருங்காட்சியகத்தில் கொள்ளை!

கொழும்பு அதி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த குழு வொன்று அங்கிருந்த பொருட்கள் பலவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அருங்காட்சியகத்தினுள் நேற்றிரவு திருடர்கள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அருங்காட்சியகத்தின் இரண்டாம் மாடியின் ஒரு பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். விலைமதிக்க முடியாத புராதன பெறுமதியுடைய வாள் மற்றும் நாணயங்கள் உட்பட ஒருதொகை பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அயினும் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்றுள்ள இந்தத் துணிகரக் கொள்ளை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்