Published On: Sunday, March 18, 2012
பந்தல் உடைந்து நால்வர் காயம்! 18.03.2012
மீரிகம நகரில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலொன்று உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவனும் 17 வயதான இரண்டு சிறுமிகளும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள் ளனர்.

