Published On: Sunday, March 18, 2012
அரசுடன் இனி கலந்துரையாடல்கள் இல்லை!- ரஞ்சித் தேவசிறி
அரசாங்கத்துடன் இனி கலந்துரையாடல் களை மேற்கொள்ளாது ஒன்றிணைந்த சக்தி யினை கொண்ட தீர்மானங்களை மேற் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரை யாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள்ளது.இந்த தகவலை அந்த சங்கத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இந்த சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இறுதி நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 22ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடல் விரிவுரையாளர் சங்க சம்மேளன நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு இடையே இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை விரிவுரையாளர்களின் சம்பளம் தொடர்பாக பல தரப்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என பல்கலைக் கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

