Published On: Sunday, March 18, 2012
குப்பை லொறி மோதி பெண் பலி! 18.03.2012
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றை உடைத்துக்கொண்டு குப்பை லொறி உட்பிரவேசித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை லொறி பின்னோக்கிச் சென்று வர்த்தக நிலையத்தில் மோதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்ட தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

