எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Sunday, March 18, 2012

தொடரும் வைத்தியசாலைப் பணிப்பகிஷ்கரிப்பு

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஷ்கரிப்பு இன்றும் தொடர் கின்றது. தமது கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 560 வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர் ஒன்றியத்தின் பிரதம செயலாளர் கூறியுள் ளார்.

சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை ஆகியவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்திய சாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காது மருத்துவ பரிசோதனைகளை தனியார் நிறுவனங்களில் மேற்கொள்வதற்காக இலட்சக்கணக்கான ரூபாவை தினந்தோறும் வீண் விரயம் செய்வதாக பிரதம செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்