Published On: Sunday, March 18, 2012
மின் கம்பி அறுந்து வீழ்ந்தது!
பாணந்துறை வாத்துவ பகுதியில் அதி வலு கொண்ட மின் கம்பியொன்று அறுந்து வீழ்ந்ததில் அந்த பிரதேசத்தில் வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், வானொலிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் இந்த விபத்தினால் பழுதடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பகல் இடம் பெற்ற இந்த விபத்து தொடர்பாக உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைதந்து மின் கம்பியை மீளப் பொறுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பாணந்துறை நுகர்வோர் சேவைகள் மத்திய நிலையத்திடம் வினவியபோது, மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட கோளாறே இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைவதற்கான காரணமென அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பழுதடைந்த இலத்திரனியல் உபகரணங்கள் தொடர்பாக தமது அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

