எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னெஸ்பர்க்கில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது (95). அவர் மறைவுச் செய்தியை அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் பேசிய ஜூமா: "தென் ஆப்பிரிக்க மக்களே, நமது அன்பிற்குரிய...ஜனநாயக தென் ஆப்ரிக்காவிற்கு வித்திட்ட அதிபர், நம்மை விட்டு பிரிந்தார். நமது தேசம் தனது மிகப் பெரிய பிள்ளையை இழந்து விட்டது. மக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்". என்றார்.
மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்