எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Tuesday, November 26, 2013

வடக்கில் அழியும் நிலையில் கார்த்திகை பூக்கள்!

தமிழ் மக்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்குச் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மட்டுமே கார்த்திகைப் பூவும் மலர்ந்து விரிந்து பலரையும் வியக்க வைக்கும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

தற்போது வன்னியிலும் குடாநாட்டிலும் ஆங்காங்கே கார்த்திகைப் பூக்கள் மலர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளன.  கார்த்திகைப் பிறையைக் கண்டவர்கள் போன்று கார்த்திகைப் பூவைக் கண்ணுற்றவர்களும் தம் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும்.

தற்போது மாவீரர்நாள் ஆரம்பமாகியிருப்பதால் வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் கார்த்திகை கொடிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வேலிகளில் படர்ந்திருக்கும் கார்த்திகை கொடிகளையும் அழித்து விடுமாறு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் விநாயகர் விரதம், திருவெம்பாவை பூசைகளுக்கும் இந்த மலர்கள் பயன் படுத்தப்படுவது வழக்கமாகும்.

எனினும் இராணுவத்தினரின் கெடுபிடிகளால் கார்த்திகை மலர்களும் வடக்கு கிழக்கிலிருந்து அழிந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில்  படையினர் ஈடுபட்டுள்ளனர்.


நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்