எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Sunday, March 18, 2012

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து மற்றுமொரு புத்த துறவி தற்கொலை.

திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து இன்னொரு புத்த துறவி தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திபெத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத் துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை கோரியும் திபெத் மக்கள் போராடி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் உலக நாடுகளின் ஆதரவை பல ஆண்டுகளாக கோரி வருகிறார். இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள அபா என்ற இடத்தில் 20 வயது திபெத் புத்த மத துறவியான லாப்சங் சல்ட்ரிம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீக்குளித்து சீனாவுக்கு எதிராக கோஷமிட்டார். அவரை பிடிக்க போலீசார் ஓடிவந்தனர். அவர்களிடம் சிக்காமல் துறவி உயிருடன் எரிந்தபடி சாலையில் ஓடினார்.

உடல் முழுவதும் தீ பரவியதில் சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இத்தகவலை இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள புத்தமத துறவிகள் 2 பேர் மின்னஞ்சலில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் சீனாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 30 புத்த மத துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய் துள்ளனர். இதற்கு தலாய் லாமாதான் காரணம். அவர்தான் துறவிகளை தூண்டி வருகிறார் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்