Published On: Sunday, November 24, 2013
புதிய அதிவேக பாதைகள் அமைக்க அரசு தீவிரம்
இலங்கையின் வடக்குப் பகுதிக்கான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த வீதியின் முதல் கட்டப் பணிகள் ஹெண்டரமுல்லையில் இருந்து மீரிகம வரை நிர்மாணிக்கப்படும். இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், மூன்றாம் கட்டம் பணிகள் மீரிகமவில் இருந்து கண்டி வரை நிர்மாணிக்கப்படும். 4 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார். அதேவேளை யாழ் - கொழும்பிற்கான அதிவேக பாதை அமைக்கும் பணிகளும் விரையி் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பாதை அமைப்புப் பணிகளிற்கான நிதி உதவிகளை சீன அரசு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


