Published On: Saturday, March 17, 2012
குடியேற முடியாத அராலி, சங்கானை மக்கள்
மீள்குடியேற்றத்துக்கான அனுமதி வழங்கப் பட்டு மூன்று வருடங்கள் முழுமை பெற்ற போதும் அராலி சங்கானை குடியேற்ற மக்களின் பிரச்சனை தீரவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் செயலாளர் சி.இரங்க ராஜன், கடந்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி அராலி ஊர்த்தியில் உள்ள 35 குடும்பங் களுக்கும் சங்கானை மத்தியிலுள்ள 35 குடும்பங்களுக்குமான வலிமேற்கு பிரதேச சபையின் காணிகளை பகிர்ந்து வழங்குமாறும் அதற்கான சட்ட ரீதியான உறுதிகளை வழங்குமாறும் கோரியிருந் தார் ஆனால் ஒரு வருடம் கடந்தும் கூட இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் கடந்த 50 வருடங்களாக குடியிருக்கும் 70 குடும்பங்களும் நிரந்தர அபிவிருத்தியின்றி மிகவும் அல்லல்படுவதாக வலி.மேற்கு பிரதேச செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார். வலிகாமம் மேற்கில் உள்ளுராட்சி சபை பொறுப்பேற்றதும் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் சபைத் தலைவரும் உறுப்பினர்களும் பாராமுகமாக இருப்பதாக அராலி சங்கானைப் பிரதேச சபையின் காணியிலுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

